8 கடைகளுக்கு `சீல்'

வாடகை கட்டாத 8 கடைகளுக்கு `சீல்';

Update: 2022-08-30 21:30 GMT

அம்பை:

அம்பை அகஸ்தீஸ்வரர் சுவாமி கோவிலுக்கு பாத்தியப்பட்ட கடைகள் அம்பை மெயின் ரோடு மற்றும் சந்தை பஜாரில் உள்ளன. இதில் நீண்ட காலமாக வாடகை செலுத்தாத கடைகள் இருந்தன. இந்தநிலையில் இந்து அறநிலையத்துறை உத்தரவின் பேரில் உதவி ஆணையர் கவிதா, ஆய்வாளர் கோமதி, செயல் அலுவலர் ரேவதி, அகஸ்தீஸ்வரர் சுவாமி அறங்காவலர் குழு தலைவர் சங்கு சபாபதி, சங்கரன்கோவில் அறங்காவலர் குழு தலைவர் முருகசாமிநாதன் மற்றும் கோவில் நிர்வாக குழு உறுப்பினர்கள் முன்னிலையில் வாடகை கட்டாத 8 கடைகளுக்கு அறநிலையத்துறை சார்பில் `சீல்' வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்