புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு `சீல்' வைப்பு

புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு `சீல்' வைக்கப்பட்டது

Update: 2022-09-29 00:13 GMT

நெல்லை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சசிதீபா, பாளையங்கோட்டை மண்டலம் மற்றும் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சங்கரலிங்கம் ஆகியோருடன் தாழையூத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இன்னோஸ்குமார் ஆகியோர் இணைந்து நேற்று தாழையூத்து, ராஜவல்லிபுரம் ஆகிய பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்கள் பொதியப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றதா? என திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது ராஜவல்லிபுரம் மெயின்ரோட்டில் ஒரு கடையில் தொடர்ந்து 2-வது முறையாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. இதையடுத்து கடை உரிமையாளரான துரைராஜ் என்பவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் சென்னை உணவு பாதுகாப்பு ஆணையர் லால்வேனா உத்தரவுப்படி அந்த கடையை மூடி `சீல'் வைத்தனர்.

இதே போல் தாழையூத்தில் ராஜன் என்பவரது கடையில் 200 கிராம் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மதுரை ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில், தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்களில் உணவு பொருட்கள் பொதியப்பட்டு விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. அந்த கடைக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்