உரிமம் இல்லாமல் இயங்கிய உணவகத்துக்கு 'சீல்' வைப்பு

உடன்குடி அருகே உரிமம் இல்லாமல் இயங்கிய உணவகத்துக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.

Update: 2023-01-27 18:45 GMT

உணவு பாதுகாப்புத் துறையின் மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன் உத்தரவின் பேரில், உடன்குடி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) சக்திமுருகன் நேற்று உடன்குடி அனல்மின்நிலையம் அருகே திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அந்த பகுதியில் உள்ள உணவகம் எந்தவித உணவு பாதுகாப்பு உரிமமும் பெறாமல் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த உணவகத்தை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். மேலும் தொடர்ந்து இதுபோன்ற ஆய்வுகள் நடத்தப்படும். எனவே, உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமத்தை, https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து பெற்ற பின்னரே, உணவு வணிகம் புரிய வேண்டும் என்றும், உரிய உரிமம் பெறாமல் உணவு வணிகம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்