மளிகை கடைக்கு 'சீல்' வைப்பு
பிளாஸ்டிக் பைகள் பதுக்கிய மளிகை கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
கூடலூர்,
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், தடையை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் வருவாய்த் துறையினர் நேற்று திடீரென வணிக நிறுவனங்களில் சோதனை நடத்தினர்.
கூடலூர் நகரில் தாசில்தார் சித்தராஜ் தலைமையில் வருவாய்த்துறையினர் கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மெயின் ரோட்டில் உள்ள ஒரு மளிகை கடையில் 45 கிலோ பிளாஸ்டிக் பைகள் பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அதை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து மளிகை கடையை பூட்டி சீல் வைத்தனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் கூறும்போது, பறிமுதல் செய்த பிளாஸ்டிக் பைகளுக்கு அபராத தொகை வசூலிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என்றனர்.