தர்மபுரியில் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்துக்கு 'சீல்'

Update: 2023-03-13 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி 4 ரோடு அருகே கம்யூனிஸ்டு கட்சியினருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தை அலுவலகமாக பயன்படுத்துவது தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி நிர்வாகிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தநிலையில் நேற்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி சிறப்பு கூட்டம் இங்கு நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த சிலர் கூட்டம் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2 கட்சிகளை சேர்ந்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, தாசில்தார் ஜெயசீலன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு தீர்வு காண முடிவெடுக்கப்பட்டது. இருதரப்பினரும் அமைதி பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தனர். அதுவரை அந்த அலுவலகத்தை பூட்டி வைக்க முடிவெடுக்கப்பட்டது. இதையடுத்து அலுவலகத்தை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர். அங்கு பாதுகாப்பிற்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்