வேதாரண்யத்தில் கடல் சீற்றம்
மாண்டஸ் புயல் காரணமாக வேதாரண்யத்தில் கடல் சீற்றம்
வேதாரண்த்தில் கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. அலைகள் 5 அடி உயரம் எழுந்தது. கடல் சீற்றம் காரணமாக ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம், மணியன்தீவு, கோடியக்கரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச்சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக தங்கள் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை கரையில் இருந்து சற்று தொலைவில் பாதுகாப்பாக நிறுத்தி வைத்திருந்தனர். கடல் அலை சீற்றத்தால் கடற்கரையில் இருந்த தென்னை மரம் வேரோடு சாய்ந்தது.