எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-11 18:45 GMT

செங்கோட்டை:

தமிழகத்தில் கனிம வளங்கள், இயற்கை வளங்களை பாதுகாக்க வலியுறுத்தி செங்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தென்காசி மாவட்ட தலைவர் யாசர் கான் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சிக்கந்தர், மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் திவான் ஒலி, மாவட்ட துணைத்தலைவர் செய்யது மஹ்மூத், மாவட்ட செயலாளர் நூர் முகம்மது, மாவட்ட பொருளாளர் கல்வத் கனி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக், மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் ராம்மோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் இசக்கித்துரை, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் டேனி அருள்சிங், தென்னிந்திய நதிநீர் இணைப்பு சங்க மாநில துணைத்தலைவர் ஜாகிர் உசேன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் வேலுமயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் முகம்மது அலி நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்