தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு

வேதாரண்யம் அருகே தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2022-12-15 18:45 GMT

வேதாரண்யம்:

வேதாரண்யத்தை அடுத்த புஷ்பவனம் கஞ்சமலை காட்டை சேர்ந்தவர் கதிரேசன். இவர் நேற்று அந்த பகுதியில் நடந்த இறுதி ஊர்வலத்தில் நடனம் ஆடியுள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த விவசாய தொழிலாளியான மாரியப்பன் (வயது42) என்பவர், கதிரேசன் உறவினர் ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி தேவிகாவிடம் இறுதி ஊர்வலத்தில் கதிரேசன் நடனம் ஆடுவதை நிறுத்துமாறு தெரிவித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ராமகிருஷ்ணன், மாரியப்பனை அரிவாளால் வெட்டியுள்ளார். அவரை தேவிகா இரும்பு கம்பியால் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த மாரியப்பனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்த புகாரின் பேரில் வேதாரண்யம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலியபெருமாள் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு த தப்பி ஓடிய ராமகிருஷ்ணன், தேவிகா ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்