பெயிண்டருக்கு அரிவாள் வெட்டு
நாச்சியார்கோவில் அருகே பெயிண்டரை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள மருதாநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவருடைய மகன் அறிவழகன்(வயது31). பெயிண்டரான இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த குமார் (35) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மருதாநல்லூர் கடைவீதியில் இவர்கள் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் அறிவழகனை அரிவாளால் குமார் வெட்டியதாக கூறப்படுகிறது. அரிவாள் வெட்டில் காயமடைந்த பெயிண்டர் அறிவழகன் கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாா். இது குறித்து நாச்சியாா்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.