வடமாநில ஐஸ் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு

ஏர்வாடி அருகே வடமாநில ஐஸ் வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

Update: 2023-05-18 18:57 GMT

ஏர்வாடி:

உத்தரபிரேதச மாநிலம் அசோஹா உன்னா மாவட்டம் குசாலிகெராவை சேர்ந்தவர் விஜய் ஷியாம் மகன் நீரஜ் (வயது 26). இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏர்வாடி அருகே உள்ள பெரியநாயகிபுரத்தில் வாடகை வீட்டில் தங்கியிருந்து குல்பி ஐஸ் வியாபாரம் செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று இவர் அங்குள்ள தெரு நல்லியில் குல்பி ஐஸ் வைக்கும் பாத்திரத்தை கழுவினார். அப்போது அவருக்கும், அதே பகுதியை சேர்ந்த செந்தில்வேல் (50) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த செந்தில்வேல், நீரஜை ஆபாசமாக பேசி, தலையில் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த நீரஜை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி ஏர்வாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி செந்தில்வேலை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்