மதுரை ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கலா(வயது 46, பெயர் மாற்றப்பட்டுள்ளது), மகளிர் குழு தலைவி. இவருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இந்தநிலையில் முகமது அனிபா(59) என்பவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. கலாவின் பிள்ளைகள் வளர்ந்து விட்டதால் முகமது அனிபாவை விட்டு பிரிந்து வாழ முடிவு செய்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று அரிவாளால் கலாவை, முகமது அனிபா வெட்டினார். புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது அனிபாவை கைது செய்தனர்.