டிரைவருக்கு அரிவாள் வெட்டு; நண்பர் கைது

வீரவநல்லூரில் டிரைவருக்கு அரிவாளால் வெட்டிய நண்பர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-21 19:24 GMT

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் கிளாக்குளத்தைச் சேர்ந்தவர் உமையப்பன். இவருடைய மகன் மாரிமுத்து என்ற முத்து நாராயணன் (வயது 34). இவர் சொந்தமாக லோடு ஆட்டோ வாங்கி வாடகைக்கு ஓட்டி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் குமார் மகன் மதன் என்ற கருப்பசாமி (26). நண்பர்களான இவர்கள் 2 பேரும் அடிக்கடி ஒன்றாக அமர்ந்து மது அருந்துவது வழக்கம். குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு முத்து நாராயணன் விரதம் இருந்து மாலை அணிந்துள்ளார். நேற்று முன்தினம் இரவில் மதன் அப்பகுதியில் மது அருந்தினார். இதனைப் பார்த்து முத்து நாராயணன் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மதன் அரிவாளால் முத்து நாராயணனை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின்பேரில், வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மதனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்