கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
மாவடியில் முன்விேராதத்தில் கட்டிட தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
ஏர்வாடி:
மாவடி ராமச்சந்திரபுரம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் அஜித்குமார் (வயது 25). கட்டிட தொழிலாளி. இவருக்கும், மாவடி எம்.எஸ்.எஸ்.நகரை சேர்ந்த லிங்கம் மகன் பிலிப் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று அஜித்குமார் மாவடி பஜாருக்கு பூ வாங்க சென்றார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பிலிப், முத்துகிருஷ்ணன் மகன் சரவணன் ஆகியோர் அஜித்குமாரை அவதூறாக பேசி, அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த பிலிப் ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிலிப், சரவணன் ஆகியோரை தேடி வருகின்றனர்.