தேன்கனிக்கோட்டையில்மனைவிக்கு அரிவாள் வெட்டு; லாரி டிரைவர் கைது

Update: 2023-08-16 19:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டையில் மனைவியை அரிவாளால் வெட்டிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப தகராறு

ஓசூர் அருகே பத்தலப்பள்ளியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). லாரி டிரைவர். இவரது மனைவி சுஜாதா (30). இவர்களுக்கு 12 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் கணவரை பிரிந்து பேரண்டப்பள்ளி அருகே கதிரேப்பள்ளியில் சுஜாதா தனியாக வசித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் தேன்கனிக்கோட்டை பேட்டராய சாமி கோவில் அருகே சுஜாதா நடந்து சென்றார். அங்கு வந்த சுரேஷ் அவரிடம் தகராறு செய்தார். அப்போது தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மனைவியை வெட்டினார். இதில் சுஜாதா படுகாயமடைந்தார்.

லாரி டிரைவர் கைது

இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் சுரேசை கைது  செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்