மருந்து கடையில் திருட்டு

புளியங்குடியில் மருந்து கடையில் பணம் திருட்டுப்போனது.

Update: 2023-01-24 18:45 GMT

புளியங்குடி:

தென்காசி மாவட்டம் புளியங்குடி டி.என்.புதுக்குடியில் மாரியப்பன் என்பவர் மருந்து கடை (மெடிக்கல் ஸ்டோர்) நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் மாரியப்பன் மற்றும் அவரது மகன் தெய்வலால் ஆகியோர் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். நேற்று காலை இருவரும் கடைக்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஷட்டர் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது மேசையில் வைத்திருந்த ரூ.33 ஆயிரம் திருடு போயிருந்தது தெரிய வந்தது. இதுபற்றி மாரியப்பன் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Tags:    

மேலும் செய்திகள்