நாகர்கோவிலில் என்ஜினீயரிங் மாணவருக்கு கத்திக்குத்து

நாகர்கோவிலில் என்ஜினீயரிங் மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2022-06-16 20:34 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் என்ஜினீயரிங் மாணவருக்கு கத்திக்குத்து விழுந்தது.

கத்திக்குத்து

நாகர்கோவில் டி.வி.டி. காலனியை சேர்ந்தவர் ஆலன் ஹைடன் (வயது 19). இவர் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் சொந்த ஊர் வந்துள்ளார். இவருக்கும், நெசவாளர் காலனியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் இடைேய முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று ஆலன் ஹைடன் சேவியர் காலனி பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த சந்தோஷ், அவரது நண்பர் கோட்டாரை சேர்ந்த பிரவீன் (20) ஆகியோர் சேர்ந்து ஆலன் ஹைடனிடம் தகராறு செய்து கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீனை கைது செய்தனர். மேலும் சந்தோசை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்