பெண்ணுக்கு கத்திக்குத்து;கணவர் மீது வழக்கு

திருவாடானை அருகே பெண்ணை கத்தியால் குத்திய கணவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-06-18 15:47 GMT

தொண்டி,

திருவாடானை தாலுகா ஆண்டிவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 38).இவருடைய மனைவி சரண்யா (33). இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒரு வருடமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். சரண்யா அவரது தாயார் வீட்டில் இருந்து கொண்டு கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனை ராமகிருஷ்ணன் விரும்பவில்லை.

இதனால் சரண்யாவிடம் வேலைக்குப் போக கூடாது என கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொள்ளாத சரண்யா வேலைக்கு சென்று வந்துள்ளார்.

சம்பவத்தன்று சரண்யாவை, ராமகிருஷ்ணன் அவதூறாக பேசி கையில் வைத்திருந்த கத்தியால் வயிற்றில் குத்தி உள்ளார். இதில் காயமடைந்த சரண்யா திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் திருவாடானை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சித்ராதேவி மற்றும் போலீசார் சரண்யாவின் கணவர் ராமகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்