நாகூர் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில்

நாகூர் பகுதியில் சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்கள் அவதி;

Update: 2023-02-24 18:45 GMT

நாகூர்:

நாகை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கடும் பனிப்பொழிவு நிலவியது. தற்போது கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.இந்த நிலையில் நாகையை அடுத்த நாகூரில் கடந்த இரண்டு நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியில் செல்லவே அச்சப்படுகின்றனர்.

வெயிலை சமாளிப்பதற்கு இளநீர், சர்பத், மோர், தர்பூசணி உள்ளிட்ட குளிர்ச்சியாக பொருட்களை தேடி வாங்கி சாப்பிடுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்