பெண்ணுக்கு கத்தரிக்கோல் குத்து; கணவர் கைது

பெண்ணுக்கு கத்தரிக்கோலால் குத்திய கணவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-05-27 20:08 GMT

நெல்லை அருகே உள்ள மேட்டுபிராஞ்சேரி, வடக்கு காலனி தெருவை சேர்ந்தவர் சின்னத்துரை (வயது 40). இவருக்கும், ராஜம்மாள் என்பவருக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ராஜம்மாளை, சின்னத்துரை அவதூறாக பேசி உள்ளார். அதை ராஜம்மாள் கண்டித்ததால் அவரை சின்னத்துரை கத்தரிக்கோலால் குத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜம்மாள் கங்கைகொண்டான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சுதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சின்னத்துரையை நேற்று கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்