அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா

அளக்குடி அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடந்தது.

Update: 2023-05-12 18:45 GMT

கொள்ளிடம்:

கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் திருவிழா நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் பாலு தலைமை தாங்கினார். இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் கிருத்திகா வரவேற்றார். அறிவியல் இயக்க தலைவர் ரவிச்சந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தினிரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வானவில் மன்ற கருத்தாளர் ராஜஸ்ரீ கலந்து கொண்டு அறிவியல் சிந்தனையை தூண்டும் வகையில் எளிய பொருட்களை பயன்படுத்தி புவி ஈர்ப்பு விசை, மைய நோக்கு விசை, மைய விலக்கு விசை, காற்றழுத்தம், காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படுதல், வானவில்லின் நிறங்கள் எப்படி உருவாகின்றன உள்ளிட்டவைகளை செயல் விளக்கும் மூலம் செய்து காட்டினார். மேலும் அறிவியல், கணிதம் மற்றும் மேஜிக் உள்ளிட்ட செயல்களும் செய்து காண்பிக்கப்பட்டன. இதில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் வர்ஷா, ஷர்மிலி, விஷாலி, கங்கா, வினோதினி மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்