அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா

செந்துறை அருகே அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது.;

Update: 2023-05-07 19:05 GMT

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பழமலைநாதபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடிக்கல்வி திட்டம் இணைந்து மாணவர்களுக்கு கோடைக்காலத்தில் "ஆயிரமாயிரம் அறிவியல் திருவிழா" நடைபெற்றது. இதில் வானவில் மன்ற கருத்தாளர் ஜோதி கலந்து கொண்டு மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை தூண்டும் வகையில் பல சோதனைகளை செய்து காட்டியும், புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அரசின் திட்டத்தை எடுத்து கூறினார். மாணவர்கள் கோடை விடுமுறையிலும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்