திட்டக்குடி
பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவியல் ஆயிரமாயிரம் திருவிழா திட்டக்குடி அடுத்த செவ்வேரி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் நடைபெற்றது. இதற்கு தலைமை ஆசிரியர் மகாராஜன், ஊராட்சி மன்ற தலைவர் நதியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் அறிவியல் சார்ந்த பல நிகழ்வுகள், எளிய மன கணக்குகளையும் ஆசிரியர் கள் செய்து காட்டினர். கோடைகாலத்தில் மிகவும் பயனுள்ள இந்த திட்டத்தினால் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று ஆசிாியா்கள் கூறினார்கள். இதில் ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். வானவில் மன்றம் மற்றும் இல்லம் தேடி கல்வி திட்டம் சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மணிமேகலை மற்றும் முருகானந்தம், சின்னராசு, பிரியங்கா, மாணவர்கள் கலந்துகொண்டனர். முடிவில் ஒருங்கிணைப்பாளர் வழியரசன் நன்றி கூறினார்.