காளையார்கோவில்
சிவகங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடக்க விழா காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட செவல்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை தாங்கினார். ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக பள்ளி அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. காளையார்கோவில் ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா, இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் ஆரோக்கிய கிறிஸ்டி, சரிதா உள்பட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்சாண்டர் துரை நன்றி கூறினார்.