அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
இடையக்கோட்டை நேருஜி அரசு மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நேற்று நடந்தது.
பேரிடர் மேலாண்மை, நீர்மேலாண்மை, திடக்கழிவு மேலாண்மை, காற்றாலை மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தினர். மேலும் பள்ளி வளாகத்தில், இஸ்ரோ விஞ்ஞானிகள் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கி நிற்பது போன்று பிரமாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது.
ஆசிரியர்கள் உதவியுடன் மாணவ-மாணவிகள் அதனை அமைத்து காட்சிப்படுத்தினர். இது, கண்காட்சியை பார்வையிட வந்த மாணவ-மாணவிகள், பொதுமக்கள் என அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.