அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி
அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
தோகைமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ-மாணவிகளுக்கான வட்டார அளவிலான போட்டிகள் மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதனை பள்ளி தலைமையாசிரியர் இளங்கோ தொடங்கி வைத்தார். தோகைமலை வட்டார வள மையத்தின் மேற்பார்வையாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார். போட்டிகளை தோகைமலை வட்டார கல்வி அலுவலர்கள் ராஜலட்சுமி, மாகாளி ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.
இதில், மாணவ-மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை எழுதுதல், வினாடி வினா ஆகிய போட்டிகள் நடைபெற்றது. பின்னர் அறிவியல் கண்காட்சி காட்சிபடுத்தப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளர் கோமதி, வட்டார வள மையத்தின் ஆசிரியர் பயிற்றுனர்கள் செய்திருந்தனர்.