ஆதித்தனார் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி

திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-02-28 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விலங்கியல் துறை மற்றும் தாவிரவியல் துறை சார்பில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சிக்கு கல்லூரி முதல்வர் து.சி.மகேந்திரன் தலைமை தாங்கி, கண்காட்சியை தொடங்கி வைத்தார். கல்லூரி செயலர் ச.ஜெயக்குமார் வாழ்த்தி பேசினார். விலங்கியல்துறை தலைவர் சுந்தரவடிவேல் வரவேற்றார். கல்லூரி கணிதத்துறை தலைவர் பசுங்கிளி பாண்டியன், சுற்றுச்சூழல் தூய்மை என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.

இக்கண்காட்சியில் விலங்கியல் மற்றும் தாவரவியல் துறைகளில் பதப்படுத்தப்பட்ட உயிரினங்கள் மற்றும் தாவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. பல்வேறு வகையான நுண்ணோக்கிகள், அறிவியல் உபகரணங்களின் பயன்பாடுகள் மற்றும் மாதிரிகள் மாணவர்களால் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. கண்காட்சியில் பல்வேறு துறைகளை சார்ந்த பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கண்காட்சியை பார்வையிட்டனர். தாவரவியல் துறை தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார். ஒருங்கிணைப்பாளராக வசுமதி, ஆரோக்கியமேலி பர்னாந்து ஆகியோர் செயல்பட்டனர். கண்காட்சி அமைப்பு செயலாளராக லிங்கதுரை, மணிகண்ட ராஜா ஆகியோர் செயல்பட்டனர். வேலாயுதம் மற்றும் விலங்கியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்