அறிவியல் கண்காட்சி

இல்லம் தேடிக்கல்வி சார்பில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.

Update: 2023-04-23 18:53 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டி பகுதியில் உள்ள தன்னார்வலர் ஈஸ்வரி, தனது உயர் தொடக்க நிலை மையத்திற்கு வருகை புரியும் மாணவ,மாணவிகளை கொண்டு இக் கல்வியாண்டு முழுவதும் கற்றுக் கொண்ட அறிவியல் பாடத்தின் அடிப்படையில் ஒரு கண்காட்சியை அமைத்திருந்தாா். இந்த கண்காட்சியை இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் ஜெயக்குமார் ஞானராஜ், திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறுகையில்:- தற்போது தமிழ்நாடு அரசு, அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கற்றல் செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற முழு முயற்சி மேற்கொண்டுள்ளது. மேலும் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்த வாய்ப்பினை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களின் செயலியில், புதிய மாணவர் சேர்க்கைப் படிவம் மற்றும் மாணவர் சேர்க்கை விவரம் என்ற தலைப்புகள் தரப்பட்டுள்ளது. தன்னார்வலர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் பகுதி குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கண்காட்சியில் 27 வகையான அறிவியல் படைப்புகளை மாணவ-மாணவிகள் காட்சிப்படுத்தியிருந்தனர். இதனை தன்னார்வலர்கள் சிவரஞ்சினி, சிவமதி, பாண்டிச்செல்வி, பெற்றோர், மாணவர்கள் பார்வையிட்டனர்.  

Tags:    

மேலும் செய்திகள்