அறிவியல் கண்காட்சி
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கீழக்கரை,
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் எஸ்.சுமையா வரவேற்றார்.மாவட்ட ்கல்வி அலுவலர் தனியார் பள்ளிப் பிரிவு பாலாஜி தலைமையில் அழகப்பா பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜோதிபாசு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கீழக்கரை பேர்ல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பாத்திமா பர்ஹானாவிற்கு இளம் விஞ்ஞானி விருது வழங்கப்பட்டது. கண்காட்சியில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளின் 170 அறிவியல் செய்முறை மாதிரிகளும் பேச்சு, கட்டுரை, பாட்டு மற்றும் நடனப் போட்டிகளும் நடைபெற்றன. இறுதியாக உள்தர உத்தரவாதக் குழுத் தலைவர் ரௌவுப் நிஷா நன்றி கூறினார்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளையின் துணைப் பொது மேலாளர் சேக் தாவூத் கான், கல்லூரி ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனத் தொடர்பு இயக்குநர் முனைவர் இர்பான் அஹமது மற்றும் பேராசிரியர்கள் அலுவலகப் பணியாளர்கள் செய்திருந்தனர்.
========