அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி;

Update: 2023-05-26 12:07 GMT

குண்டடம்

குண்டடத்ைத அடுத்த புதுருத்ரவாதி அரசு பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. கண்காட்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் நடராஜன் தலைமை தாங்கினார். வானவில் மன்ற கருத்தாளர் ரவி முன்னிலை வைத்தார். இதில் அறிவியல் இயக்க மாவட்ட துணைத்தலைவர் ஸ்ரீராம்குமார் அனைத்து மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பேசினார். விழாவில் புது ருத்ராவதி பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் அறிவியல் சார்ந்த படைப்புகளை செய்திருந்தனர்.

இதில் அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், ஒன்றிய துணைத்தலைவர் பரமசிவம், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் குமாரசாமி, கிருஷ்ணன், மற்றும் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்கள் பள்ளி மாணவ-மாணவிகளும், பெற்றோர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்