100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள்
100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற பள்ளிகளில் அரசுப்பள்ளிகள்- 37, அரசு ஆதி திராவிடர் நலப்பள்ளி- 1, அரசு உதவிபெறும் பள்ளிகள்- 4, மெட்ரிக் பள்ளிகள்- 18, சுயநிதிப்பள்ளிகள்- 11 என மொத்தம் 71 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 12 பள்ளிகள் கூடுதலாக 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.