சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்; அறிவிப்பு வெளியீடு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2023-06-20 01:45 GMT

சென்னை,

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்தது. இதனால், வெயிலின் தாக்கமும் குறைந்தது. விடிய விடிய பெய்த இந்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளிலும், சாலையோரங்களிலும் மழைநீர் தேங்கியது.

இதனால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனை முன்னிட்டு, பள்ளிக்கூட மாணவர்களின் நலன் கருதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு அதிக அளவு மழை இல்லை. இதனால், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதன்படி, காஞ்சிபுரத்தில் பள்ளிகள் வழக்கம்போல் இன்று இயங்கும் என கலெக்டர் கலை செல்வி மோகன் அறிவித்து உள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்திலும் இன்று பள்ளி விடுமுறை விடப்படவில்லை என கலெக்டர் அறிவித்து உள்ளார். பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

திருவள்ளூரில் அதிக அளவு மழை இல்லாத நிலையில், பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என கலெக்டரான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்