ஜீன் 13-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

தமிழகத்தில் ஜீன் 13-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.;

Update:2022-06-05 13:27 IST

சென்னை,

திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வழங்கினார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது:-

பள்ளி திறப்பில் எந்த மாற்றமும் இல்லை. ஜீன் 13-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமா என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

கல்வித்துறை தொடர்பான பல்வேறு நிகழ்சிகளை முதல்-அமைச்சர் அறிவுறுத்தலின்பேரில் நடத்தி வருகிறோம். அதுமட்டுமல்லாமல் நம் மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நாம் முடிவு செய்யும் கூட்டத்திற்குதான் முக்கியத்துவம் தருவோம். அது தான் நம் மாநிலத்திற்கும் நல்லது.

நீட் தேர்வை நடத்துவதே பாஜக அரசு தான். ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமே என நம்மிடம் கூறுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்