காய்ச்சல் அதிகமாக பரவும் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்

காய்ச்சல் அதிகமாக பரவும் பகுதியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும் என்று கொள்ளுக்காரன்குட்டையில் தியாகிகளுக்கு அஞ்சலி் செலுத்திய பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார்.

Update: 2022-09-17 19:19 GMT

நெய்வேலி, 

தியாகிகளுக்கு அஞ்சலி

பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் நடந்த இட ஒதுக்கீட்டு போராட்டத்தின் போது உயிர்நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி பண்ருட்டி அருகே கொள்ளுகாரன்குட்டையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பொறியாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துக்கிருஷ்ணன், செல்வமகேஷ், கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தியாகி தேசிங்கு நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். மேலும் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செய்தார்.

போராட்டத்தின் போது உயீர்நீத்தவர்களில் ஒருவரான தேசிங்கு குடும்பத்திற்கு பா.ம.க. சார்பில் ரூ.1 லட்சம் நிதியை டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. வழங்கினார்.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

பின்னர் அவர் அங்கு அமைக்கப்பட்டு இருந்த கொடி கம்பத்தில் பா.ம.க. கொடியை ஏற்றி வைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மது இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலையை உருவாக்கியது தான் திராவிட மாடல். இந்த தலைமுறையை மது, போதை, சூதுவில் இருந்து காப்பாற்ற முடியாது. அடுத்த தலைமுறையை காக்க வேண்டும். எனவே மது, போதை தடுப்பில் புதியதாக 20 ஆயிரம் காவலர்கள் நியமித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எச்.1, என்.1 வைரஸ், இன்புளுயன்சா வைரஸ் ஆகியன காரணமாக காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. எனவே அதிக நோய் தாக்கம் இருக்கும் இடங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விட வேண்டும்.

இடஒதுக்கீடு

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசை வலியுறுத்தி வருகிறோம். உடனடியாக இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், பா.ம.க. மாநில பொதுக்குழு உறுப்பினர் வேங்கை சேகர், மாநில நிர்வாகிகள் முத்து.வைத்தி லிங்கம், சக்கரவர்த்தி, செல்வ குமரன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பழ தாமரைக்கண்ணன், மாவட்ட அமைப்பு செயலாளர் கயல்ராஜன், மாநில மாணவரணி செயலாளர் விஜயவர்மன், பாட்டாளி தொழிற்சங்க தலைவர் செல்வராஜ், செயலாளர் திலகர், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், செல்வகுமார், மணிவாசகம், கணேஷ், அய்யனார், கலியபெருமாள், சதாசிவம், அறிவழகன், முத்துக்குமார், செல்லமுத்து, கணேஷ்குமார், மாவட்ட தலைவர் தட்சணாமூர்த்தி, மாவட்ட துணைசெயலாளர்கள் ரமேஷ், கார்த்திக், வேல்முருகன், ரவிசங்கர், அனந்தராமன், கிருஷ்ணராஜ், நகர செயலாளர்கள் சார்லஸ், நந்தல், சண்முகம், அய்யப்பன், தொகுதி செயலாளர் சேகர், மாவட்ட வன்னியர் சங்க தலைவர் ராஜா, செயலாளர் சுரேஷ், பண்ருட்டி முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரவிச்சந்திரன், இளைஞர் அணி சந்திரசேகர், வேல்முருகன், முன்னாள் நிர்வாகி தர்மலிங்கம், நிர்வாகிகள் செல்வ கணபதி, பிரகாஷ், ஸ்ரீராம், மாணவரணி ராஜசேகர், மகளிர் அணி நிர்வாகிகள் சிவகாமி, சுசீலா உள்ளிட்ட இளைஞரணி, மாணவரணி, வன்னியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்