அடிக்கடி சண்டை போட்டுக் கொண்ட பள்ளி மாணவர்கள் - காவல் ஆய்வாளர் வழங்கிய நூதன தண்டனை

சண்டையிட்ட மாணவர்களிடம் 20 திருக்குறளை பார்க்காமல் எழுதுமாறு காவல் ஆய்வாளர் சரஸ்வதி கூறினார்.

Update: 2022-10-13 09:12 GMT

புவனகிரி,

கடலூர் மாவட்டம் புவனகிரியில் உள்ள பள்ளி மாணவர்கள் சிலர் அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டதாக காவல்துறைக்கு தகவல் தெரிய வந்துள்ளது. அவ்வாறு சண்டையிட்டுக் கொண்ட மாணவர்களை போலீசார் ஏற்கனவே பலமுறை எச்சரித்து வந்துள்ளனர்.

இருப்பினும் மாணவர்கள் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதையடுத்து புவனகிரி காவல் ஆய்வாளர் சரஸ்வதி, சண்டையிட்ட மாணவர்கள் இரண்டு பேருக்கு 20 திருக்குறளை பார்க்காமல் எழுதுமாறு நூதன தண்டனை வழங்கினார்.

மாணவர்கள் திருக்குறளை எழுதியதும் அதனை பார்க்காமல் சொல்லச் சொன்ன போது, தனக்கு சொல்லத் தெரியாது என்று அந்த மாணவர்கள் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து எழுதியதை பார்த்து வாசிக்குமாறு காவல் ஆய்வாளர் கூறினார். பின்னர் அந்த மாணவர்களை எச்சரிக்கை செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்