மின்மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதால் பரபரப்பு

மின்மோட்டார் பழுது நீக்கும் பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-07-20 20:04 GMT

வேப்பந்தட்டை:

மின் மோட்டார் பழுது

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 130-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளி மாணவ, மாணவிகளின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி இயக்கப்பட்டு வருகிறது. அந்த மின் மோட்டாரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பழுது ஏற்பட்டுள்ளது.

வீடியோ வைரல்

இதனை நேற்று சரி செய்வதற்காக பழுது நீக்குபவர் வந்துள்ளார். அவருடன், இந்த பணியின்போது உதவிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தி உள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து பள்ளி நேரத்தில் மாணவர்களை வேலைக்கு பயன்படுத்தினால், எப்படி படிப்பார்கள்? என்று பெற்றோர்களும், பொதுமக்களும் வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்