மோட்டார் சைக்கிள் ஓட்டிய பள்ளி மாணவனின் பாதுகாவலருக்கு அபராதம்

ஜோலார்பேட்டையில் மோட்டார்சைக்கிள் ஓட்டிய பள்ளி மாணவனின் பாதுகாவலருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2023-03-12 18:47 GMT

போலீசார் சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் போலீசார் வாகன தணிக்கை மேற்கொண்டனர். ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ஒரே மோட்டார்சைக்கிளில் இரண்டு வாலிபர்கள் அதிவேகமாக வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் வாணியம்பாடி பகுதியை சேர்ந்த வயது 15 மாணவன் என்பதும், பெற்றோர்கள் இறந்துவிட்ட நிலையில் தனது உறவினரின் பாதுகாப்பில் வாழ்ந்து வருகிறார். இவரது பின்னால் அமர்ந்திருந்த வாலிபர் ஜோலார்பேட்டையில் உள்ள வக்கணம்பட்டி பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் ஜீவா (22) என்பதும் தெரியவந்தது.

பாதுகாவலருக்கு அபராதம்

இதனையடுத்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்து, அவர்கள் இருவரையும் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். 18 வயது பூர்த்தியடையாமல் வாகனத்தை ஒட்டிய மாணவனின் பாதுகாவலருக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

பின்னர் மீண்டும் இது போன்ற செயலில் ஈடுபட்டால் அபராத தொகையுடன் சட்ட மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்