தடகள போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை
தடகள போட்டியில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.;
வடக்கன்குளம்
மத்திய பிரதேசத்தில் இளையோருக்கான கேலோ இந்தியா தடகள போட்டி நடைபெற்றது. இதில் நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் எஸ்.ஏ.வி. பாலகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் ஜோஸ்வா தாமஸ், பால பொன்னி ஆகியோர் நீச்சல் போட்டியில் பங்கு பெற்றனர். மாணவன் ஜோஸ்வா தாமஸ் 100 மீட்டர் பிரேஸ்ட் ஸ்ட்ரோக் மற்றும் 4x100 மீட்டர் பிரீஸ்டைல் ரிலே போட்டிகளில் வெள்ளி பதக்கமும், 50 மீட்டர் பிரீஸ்டைல் மற்றும் 4x100 மீட்டர் மிட்லே ரிலே போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்றார். மாணவி பால பொன்னி 4x100 மீட்டர் பிரீஸ்டைல் ரிலே போட்டியில் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.
மேலும், தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பாக மாநில அளவிலான நீச்சல் போட்டிகள் காஞ்சீபுரத்தில் நடைபெற்றது. இதில் வடக்கன்குளம் பாலகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருந்தும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 24 தங்கப்பதக்கம், 13 வெள்ளி பதக்கம், 5 வெண்கல பதக்கம் பெற்று சாதனை படைத்தனர்.
சாதனை படைத்த மாணவர்களையும், பயிற்சி அளித்த ஆசிரியர்களான சிக்கந்தர் சார்ஜன், அஜித்குமார், பாஷா ஆகியோரையும் பள்ளி தலைவர் கிரகாம்பெல், தாளாளர் திவாகரன், முதல்வர் சுடலையாண்டி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினார்கள்.