பள்ளி மாணவர்கள் சாதனை

தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வில் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர்.

Update: 2022-12-07 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தமிழக அரசு சார்பில் இந்தாண்டு முதன்முறையாக தமிழ் இலக்கிய திறனாய்வு தேர்வு 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.1500 வீதம் 11, 12-ம் வகுப்புகளுக்கு மொத்தம் ரு.36 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.

இந்த தேர்வு எழுதிய ஆவுடையானூர் புனித அருளப்பர் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் ஹெலன்பிளஸ்ஸி, அனிதா, கோயில் அபியா, அஸ்வின் பாலாஜி, குருபரன் ஆகிய 5 பேர் தேர்ச்சி பெற்று, தென்காசி மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.

இதையடுத்து பள்ளியில் நடைபெற்ற விழாவில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளை பள்ளி நிர்வாகி மோயீசன் அடிகளார், தலைமை ஆசிரியர் சே.அந்தோணி அருள்பிரதீப், பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஜானி, சகாயராணி மற்றும் ஆசிரியை மேரி ஆஞ்சலா ஆகியோர் பாராட்டி பரிசு வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்