மதுரை கீழவெளிவீதி லட்சுமிபுரம் ஏழாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பிரபாகரன் மகன் வேல் பாண்டி(வயது 14). இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சில நாட்களாக இவர் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்தபோது வேல்பாண்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவன் வேல்பாண்டியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.