ரெயில் மோதி பள்ளி மாணவன், முதியவர் பலி

அரக்கோணம் அருகே ரெயில் மோதி பள்ளி மாணவன், முதியவர் பலியாகினர்.

Update: 2022-07-07 18:08 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பள்ளியாங் குப்பத்தை சேர்ந்த வையாபுரி மகன் அஜித் (வயது 14). 10-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் இரவு 7.30 மணி அளவில் அங்குள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது அந்த வழியாக வந்த ரெயில் அஜித் மீது மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.

இதே போன்று அரக்கோணத்தை அடுத்த கீழ்குப்பம் பகுதியை சேர்ந்த தயாளன் (67) என்பவர் மங்கமாபேட்டை ரெயில்வே மேம்பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு தண்டவாளத்தை கடந்த போது அவ்வழியாக வந்த ரெயில் மோதி தயாளன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த அரக்கோணம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன் மற்றும் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சென்று உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்