கார் மோதி பள்ளி மாணவன் படுகாயம்
காயல்பட்டினத்தில் கார் மோதி பள்ளி மாணவன் படுகாயம் அடைந்தான்.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் அருணாசலபுரத்ைத சேர்ந்த ராம்குமார் மகன் முத்து ரோஷன் (வயது 11). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று அவர் பள்ளிக்குச் சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு அவர் கோமான் தெரு மேல தெரு வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. இதில் முத்துரோஷன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினரும், பெற்றோரும் அவரை மீட்டு தூத்துக்குடி தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆறுமுகநேரி போலீசார் காரை ஓட்டி வந்த காயல்பட்டினத்தைச் சேர்ந்த முகமது பாசில் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.