ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
விக்கிரவாண்டி அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டியை அடுத்த டி.புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் ஜெகன்(வயது 9). அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்த இவன் நேற்று முன் தினம் மாலை அங்குள்ள உள்ள ஏரியில் நண்பர்களோடு மீன் பிடித்துக்கொண்ருடிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கிய ஜெகன் நீரில் மூழ்கினான். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவனது நண்பர்கள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் ஜெகனை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.