பள்ளி மாணவன் திடீர் சாவு

ஒட்டன்சத்திரம் அருகே, பள்ளி மாணவர் திடீரென இறந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-05-04 14:10 GMT

ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம் அருகே உள்ள வல்லக்குண்டாபுரத்தை சேர்ந்தவர் சின்னராஜ். அவருடைய மனைவி செவ்வாந்தியம்மாள். இந்த தம்பதி மகன் நந்தகுமார் (வயது 9). இவன், நீலகவுண்டன்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். உணவு சாப்பிட்டவுடன் செரிமான பிரச்சினை ஏற்ப்பட்டு அடிக்கடி இவன் வாந்தி எடுத்து வந்தான். இதற்காக கோவை, பழனியில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சேர்த்து அவனது பெற்றோர் சிகிச்சை அளித்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் உணவு சாப்பிட்டவுடன் நந்தகுமார் வழக்கம்போல வாந்தி எடுத்து மயங்கி விழுந்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள், நந்தகுமாரை மீட்டு சிகிச்சைக்காக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவனை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே நந்தகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸ் நிலையத்தில் சின்னராஜ் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி, சப் இன்ஸ்பெக்டர் பாண்டி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்