பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி சாவு
டெங்கு காய்ச்சல் அறிகுறிக்குள்ளான பள்ளி மாணவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
அரக்கோணம் காந்தி நகரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 46). மோட்டார் சைக்கிள் மெக்கானிக் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஹரிஹரன் ென்கிற அஸ்வின் (14). அரக்கோணத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்ததான். கடந்த 13-ந்தேதி வயிற்று போக்கால் பாதிக்கப்பட்ட அஸ்வின் சிகிச்சைக்காக தனியார் மற்றும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வந்தான்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை உயிரிழந்துவிட்டான். மாணவனின் உடல் உறுப்புகள் செயலிழந்து டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் இறந்ததாக கூறப்படுகிறது. அதனால் இறந்த மாணவனின் உடலை அரக்கோணம் கொண்டு வந்து உடனேயே குடும்பத்தினர் அடக்கம் செய்தனர்.