பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை

நெய்வேலியில் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-27 18:45 GMT

கடலூர்

நெய்வேலி 9-வது வட்டத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 39). என்.எல்.சி. தொழிலாளி. இவருடைய மனைவி அன்புசெல்வி. இவர்களது மகன் நிவாஷ் (17). இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நிவாஷ் வீட்டில் இருந்த போது, சண்முகமும், அன்புசெல்வியும் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டை போட்டதாக தெரிகிறது. இதை பார்த்து மனமுடைந்த நிவாஷ் உடனடியாக படுக்கை அறைக்கு சென்று, ஜன்னல் கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டாராம். இதையடுத்து அவரை பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெய்வேலி என்.எல்.சி. ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு நிவாஷை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி சண்முகம் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்