பள்ளி விளையாட்டு விழா

வேல்ஸ் வித்யாலயா பள்ளி விளையாட்டு விழா நடைபெற்றது.

Update: 2023-02-19 18:45 GMT

தென்காசி கணக்கபிள்ளைவலசையில் உள்ள வேல்ஸ் வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளியில் விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி தாளாளர் வீரவேல் முருகன் தலைமை தாங்கினார். இயக்குனர் ராஜராஜேஸ்வரி முன்னிலை வகித்தார். தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் தேசிய கொடி, ஒலிம்பிக் கொடி மற்றும் பள்ளி கொடியை ஏற்றி வைத்து, மாணவர்களின் மரியாதை அணடிவகுப்பை ஏற்று கொண்டு விழாவை தொடங்கி வைத்தார். மேலும் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்களை அணிவித்து, சான்றிதழ்களை வழங்கி பேசினார். தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் பொது மேலாளர் ஜெய்னுலாப்தீன் கலந்து கொண்டு, குழுக்களாக பிரிக்கப்பட்ட பள்ளி அணியில் அனைத்து தரப்பிலும் சிறப்பாக செயல்பட்டு முதல் இரண்டு அணிகளுக்கான வெற்றி கோப்பையையும், அணிவகுப்பு போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கான கோப்பையையும் வழங்கினார்.

மாணவர் ஆனந்தன் குமாரசாமி தலைமயிலான மாணவர்கள் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தி மைதானத்தை வலம் வந்தனர். மாணவி சுபபிரியா வரவேற்றார். மாணவர் அபிஷேக் நன்றி கூறினார். மாணவிகள் ஜாய், நிக்கேதனா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர். ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் சாந்தி, துணை முதல்வர் கார்த்திகை குமார் தலைமையில் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.



Tags:    

மேலும் செய்திகள்