சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பள்ளி தாளாளர் பக்கிரிசாமி மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.;

Update:2023-04-26 20:10 IST

கடலூர்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இயங்கி வரும் தனியார் பள்ளியின் தாளாளர் பக்கிரிசாமி, அதே பள்ளியில் படிக்கும் 5 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரில், கடந்த 11-ந்தேதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து விருத்தாசலம் நகராட்சியின் 30-வது வார்டு கவுன்சிலராக இருந்த பக்கிரிசாமியை, கட்சியில் இருந்து நீக்கி தி.மு.க. தலைமை உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜாராமன் வழங்கிய பரிந்துரையின் அடிப்படையில், பக்கிரிசாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்