ஊராட்சி தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி
ஊராட்சி தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி நடந்தது
அம்பை:
ஊராட்சி தலைவர்களுக்கான பள்ளி மேலாண்மைக்குழு பயிற்சி அம்பை யூனியன் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அம்பை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜம் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) விஜய செல்வி முன்னிலை வகித்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மாவட்ட பயிற்றுனர் கணேஷ் ஆறுமுகம், நெல்லை வட்டார ஆசிரியர் பயிற்றுனர் செல்வக்குமார் ஆகியோர் பள்ளி மேலாண்மைக்குழு அமைப்பு மற்றும் செயல்படும் விதம் குறித்து எடுத்துரைத்தனர்.
இல்லம் தேடிக்கல்வி அம்பை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் ஆபேல் சேத் திட்டம் குறித்து விளக்கவுரை ஆற்றினார். பயிற்சியில் அம்பை, சேரன்மாதேவி, பாப்பாக்குடி ஒன்றிய ஊராட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர். அம்பை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரதி சந்திரன் வரவேற்றார். இல்லம் தேடிக்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நம்பி ராஜன் நன்றி கூறினார்.