பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்
பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடந்தது.
வெள்ளியணை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக வெள்ளியணை ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி கலந்துகொண்டு, மேலாண்மை குழு செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்தும், அது சிறப்பாக செயல்பட பெற்றோர்கள் அளிக்கவேண்டிய ஒத்துழைப்பு குறித்தும் பேசினார். இதைத்தொடர்ந்து பெற்றோர்களில் இருந்து 15 உறுப்பினர்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் இருந்து மேலாண்மை குழு தலைவராக முத்துவள்ளி, துணை தலைவராக ஈஸ்வரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் மற்றும் ஆசிரியர் பிரதிநிதிகளும் தேர்வு செய்யபட்டனர். இதில், பள்ளி தலைமையாசிரியர் முத்துச்சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதேபோல் வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டத்தில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின்னர் அக்குழு உறுப்பினர்களில் இருந்து தலைவராக சாந்தி துணை தலைவராக ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் பள்ளி தலைமை ஆசிரியை கலையரசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.