பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-09-30 18:05 GMT

தொண்டி, 

திருவாடானை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு பள்ளி மேலாண்மை குழு தலைவர் தீபா ராணி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் தானியலெட்சுமி, ஆசிரியர் ஆல்பர்ட் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பொருளியல் பாடத்திற்கு பெண் ஆசிரியை நியமிக்க மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் பள்ளி வளாகத்தில் மாணவிகள் நடந்து செல்வதற்கு நடைபாதை அமைக்க வேண்டும் என்றும் பள்ளி உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்